

கிருஷ்ணகிரி வட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்வழங்கும் பணி தொடங்கி யது.
தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் ஏழை, எளிய மக்கள்பயன் பெறும் வகையில் குடும்ப அட்டைகள் வழங்கி, சலுகை விலையில் உணவு பொருட்கள் வழங்கப் படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ண கிரி மாவட்டத்தில் உள்ள8 வட்டங்களிலும் புதியகுடும்ப அட்டை வழங்கக்கோரி, ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்த பிறகு தகுதியானவர் களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிருஷ்ணகிரி வட்டத்தில் புதிதாக குடும்ப அட்டை கேட்டு, 3 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்தவர் களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. 1031 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் பட உள்ள தாகவும், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவில் சமூகஇடைவெளியுடன் விண்ணப்பித்தவர்கள் வரவழைக்கப் படுவதாக அலுவலர் கள் தெரிவித்தனர்.