ஊரடங்கு காலத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு - புதிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை :

ஊரடங்கு காலத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு   -  புதிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை  :
Updated on
1 min read

ஊரடங்கு காலத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகானந்தம், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவுக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்துள்ளது: கரோனா காலத்தில் வேலைவாய்ப்பில்லாமல் சிரமத்துக்குள்ளான மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இப்பணியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் முழு மனதுடன் ஈடுபட்டு, தமிழக முதல்வரின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய உறுதுணையாக இருப்பார்கள். எனவே, இப்பணியில் எந்தவித அச்சமும் இன்றி, மக்கள் நலன் கருதி பணியாற்றும், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவற்றை உடனடியாக அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும். மேலும், ஊரடங்கு காலத்தில் அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு சென்று வரும் வகையில், புதிய அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in