

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள பேருந்து நிலையங்கள் தற்காலிக காய்கறி சந்தைகளாக மாற்றப்பட்டன. தூத்துக்குடி காமராஜ் காய்கறி சந்தையில் கூட்ட நெரிசல் நிலவியதால், அங்கிருந்த கடைகள் அனைத்தும் அருகேயுள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன. ஆனால், லேசான மழை பெய்தாலும் பழைய பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி சகதிக்காடாக மாறிவிடும். கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பேருந்து நிலையம் சகதிக்காடானது.
இதனால் காமராஜ் காய்கறி சந்தை நிர்வாகத்தினர் கடைகளை தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள தங்களுக்கு சொந்தமான மைதானத்துக்கு மாற்ற முடிவு செய்தனர். அதன்படி காய்கறி கடைகள் அனைத்தும் நேற்று காலையில் அந்த மைதானத்துக்கு மாற்றப்பட்டன.