திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் - கரோனாவால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் -  கரோனாவால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா நோய் தொற்றினால் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள், இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி கல்யாண் தொகுப்பு திட்டத்தின் கீழ் பிரிமியம்இலவச காப்பீட்டுத் தொகை பெற தகுதியுடையவர்கள். மேலும், நாளொன்றுக்கு இளநிலை படை அலுவலருக்கு ரூ.900, இதர தகுதியினருக்கு ரூ.750 மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, இப்பணிக்கு விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தை, திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0421-2971127 மூலமாக தெரிவிக்கலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in