தேனியில் கரோனா சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை :

தேனியில் கரோனா சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை :
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங் கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி குறித்து பொதுமக்கள் விவரம் அறிந்து கொள்ள கரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த அறைக்கு (04546) 261093 மற்றும் சுகாதாரத்துறையின் (04546) 291971 எண்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிலோ தமிழக அரசின் கட்டணமில்லா 1077 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம் என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in