விருதுநகர் அரசு மருத்துவமனையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு :  கரோனா சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு : கரோனா சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்

Published on

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, விருதுநகர் அரசு மருத்துவ மனையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவ மனையில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து விருதுநகர் தொகுதி எம்எல்ஏ சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் போதிய மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவி, மருத்துவர்கள் அரவிந்த் பாபு, அன்புவேல் ஆகியோர் அவரிடம் விளக்கம் அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in