

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் கோடை மழை நீடிக்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடுமுடியாறு அணைப்பகுதியில் 15 மி.மீ. மழை பெய்திருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
சேரன்மகாதேவி- 1.2, நாங்குநேரி- 5, களக்காடு- 4.2, பாளையங்கோட்டை- 1. அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): பாபநாசம்- 100.60 அடி (143),சேர்வலாறு- 113.68 அடி (156), மணிமுத்தாறு- 86.50 அடி (118), வடக்கு பச்சையாறு- 42.63 அடி (50), நம்பியாறு- 12.53 அடி (22.96), கொடுமுடியாறு- 5 அடி (52.25).
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை, ஊத்துமலை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணையில் 5 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது. நேற்று அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் சற்று அதிகமாக இருந்தது.
நாகர்கோவில்
தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 130 கனஅடி, பெருஞ்சாணி அணைக்கு 116 கனஅடி தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் 41.60 அடி, பெருஞ்சாணி அணையில் 54.35 அடி தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் நேற்று நீர்மட்டம் 0.7 அடியாக குறைந்தது.