கரோனா நிவாரணம் வழங்குவதை ஆய்வு செய்ய அலுவலர்கள் :
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலம் 15.05.2021 முதல் காலை 8 மணியில் இருந்து நண்பகல்12 மணி வரை மட்டும் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. சமூக விலகலை பராமரிக்கும் வகையில் தெரு வாரியாக நாளொன்றுக்கு 200 டோக்கன்கள்வீதம் 10.05.2021 முதல் 12.05.2021 வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி டோக்கன் விநியோகம் பணிகளை நியாயவிலைக் கடை பணியாளர்கள் தொடங்கியுள்ளனர். கரோனா உதவித்தொகை பெற வரும் மக்கள் அனைவரும் 1 மீட்டர் இடைவெளியில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உதவித்தொகையை பெற்றுச் செல்ல வேண்டும். விடுதலின்றி அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும். இப்பணியை கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
