இன்று முதல் முழு ஊரடங்கு அமல் - சேலம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு :

இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து நேற்று வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து நேற்று வெளியூர்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Updated on
1 min read

இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், நேற்று சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க,இன்று (10-ம் தேதி) முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனை யொட்டி, நேற்று முன்தினமும், நேற்றும் முழுமையான பேருந்து இயக்கம் இருந்தது.

முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

இதனால், சேலம் , நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்து, சேலத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். மேலும், பிற மாவட்டங்களில் இருந்த பலரும் சேலம் வழியாக சொந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதனால், சேலம் புதிய பேருந்து நிலையத்தில், நேற்று பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. பெரும்பாலான பயணிகள் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

இருப்பினும், கூட்ட நெரிசல் காரணமாக பேருந்துகளில் இடம்பிடிக்க பொதுமக்கள் ஆர்வம்காட்டியதால், தனிமனித இடைவெளியை பலரும் பின்பற்ற வில்லை. பேருந்துகளிலும் இருக்கைகளில் சமூக இடை வெளி பின்பற்றப் படவில்லை. இருந்தபோதும் பயணிகள் தேவைக்கேற்ப அரசுப் போக்கு வரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in