கர்ப்பிணி மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா வார்டில் பணி புரிய விலக்கு : சேலம் மருத்துவக் கல்லூரி டீன் தகவல்

கர்ப்பிணி மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா வார்டில் பணி புரிய விலக்கு :  சேலம் மருத்துவக் கல்லூரி டீன் தகவல்
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பிணி மற்றும் தாய்ப் பாலூட்டும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பெண்களுக்கு, கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதில் இருந்து விலக்களித்து உத்தரவிடப் பட்டுள்ளது.

சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 850-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் கர்ப்பிணி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்ப்பிணி மற்றும் தாய்ப் பாலூட்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பெண்களில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு, கரோனா சிகிச்சைப் பிரிவில், பணியாற்றுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது, என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in