தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - இலவசமாக உணவு விநியோகம் :

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு -  இலவசமாக உணவு விநியோகம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறிகு றிகள் இல்லாமல் தொற்றுக்கு உள்ளானவர்கள் பலர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறு உள்ளவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன.

இவ்வாறு சிரமப்படுவோருக்கு கிருஷ்ணகிரி ஆச்சார்யா குருகுலம் நர்சரி பள்ளி நிர்வாகம் சார்பில் 3 வேளை உணவு இலவசமாக வழங்கி வருகிறது., இருப்பினும் உணவு தேவைப்படுவோருக்கு உணவை கொண்டு சேர்க்க தன்னார்வலர்கள் முன்வந்தால் இன்னும் அதிக மானவர்களுக்கு உணவு வழங்கலாம் எனவும் உணவு தேவைப்படுவோர் 98655 68355, 63835 00052 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தனியார் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in