செங்கல்பட்டு மாவட்டத்தில் - கரோனா தொடர்பான ஆலோசனை பெற தனி கட்டுப்பாட்டு அறை அமைப்பு :

செங்கல்பட்டு மாவட்டத்தில்  -  கரோனா தொடர்பான ஆலோசனை பெற தனி கட்டுப்பாட்டு அறை அமைப்பு :
Updated on
1 min read

கரோனா தொடர்பான ஆலோசனைகளைப் பெற, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் விடுத்த செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று முதல்ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்று சம்பந்தமாகவும் கரோனா சிகிச்சை பெறவும் தேவையானஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, மாவட்ட கட்டுப்பாட்டுஅறை அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், மருத்துவர், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, பேரூராட்சிகள், காவல் துறை சார்ந்த அலுவலர்களுடன், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

டோல் ஃப்ரீ எண்

இதேபோல் மக்கள் நல்வாழ்வுமற்றும் குடும்பத் துறை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 044 29510400, 044- 24303000 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், தொழிற்சாலைகள் இயக்குவது தொடர்பாக மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளர் ஹரி சித்தார்த் - 8925533952 என்ற எண்ணிலும், அதேபோல் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்கள் செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு திவ்யா - 9952000256, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளுக்கு சூர்யா - 9884470526, மதுராந்தகம், செய்யூர் பகுதிகளுக்கு இலக்கியா - 8072391217 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in