

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட துணைத்தலைவர் கற்பனை செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வராக ஸ்டாலின், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வேளாண் துறை அமைச்சராகவும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வே.கணேசன் தொழிலாளர் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிசிஆர் பரிசோதனை நடத்துவதை உறுதி செய்திட வேண்டும். கரோனா தடுப்பு ஊசிகளை தங்கு தடையின்றி மருத்துவமனைகளில் போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்து மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் பிளான்ட் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.