மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு :

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உடையார்சாமி (30). இவர், கேரள மாநிலத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு கரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், வீட்டில் துணிகளை உலர்த்த சென்றபோது, மின் கம்பி அறுந்து இவர் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உடையார்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸார், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in