3 பேர் உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள் :

3 பேர் உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்  :
Updated on
1 min read

மேலப்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது பெண், பேட்டையைச் சேர்ந்த 66 வயது பெண், பத்தமடையைச் சேர்ந்த 72 வயது ஆண் என அடுத்தடுத்து 3 பேர்கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை அடக்கம் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா தன்னார்வலர்களிடம் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, தன்னார்வ குழுவினர் உடல்களை எடுத்துச் சென்று, உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தனர். இந்தகுழுவினர் கரோனா பரவல் இரண்டாம் அலையில் இதுவரை45 பேரின் உடல்களை நல்லடக்கம்செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in