

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் விதிமுறைகளை மீறுவோருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில்முகக்கவசம் அணியாத 1,125 பேருக்கு ரூ.2.25 லட்சம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 பேருக்கு ரூ.13,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.