வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் - வெளி மாநிலத்தில் இருந்து வரும் : நோயாளிகளுக்கு அனுமதியில்லை :

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் -  வெளி மாநிலத்தில் இருந்து வரும் : நோயாளிகளுக்கு அனுமதியில்லை :
Updated on
1 min read

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் வெளி மாநில நோயாளிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட் டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனை, பென்லேண்ட் அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் சிஎம்சி மருத் துவமனை, நறுவீ மருத்துவமனை, நாராயணி மருத்துவமனை, இந்திரா நர்சிங் ஹோம் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூர் சிஎம்சிமருத்துவமனைக்கு வந்த வெளி மாநில நோயாளிகள் அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால், அந்த மருத்துவமனை யில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற மேற்கு வங்கம்உள்ளிட்ட வடமாநில நோயாளி களுக்கு அனுமதி வழங்க வேண் டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங் களை சேர்ந்த நோயாளிகள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வேலூரில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால். அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதில், கரோனா பாதிக்கப்பட் டவர்களுக்கு சிஎம்சி மருத்துவமனையில் இடமளிக்கக் கூடாது. உள்ளூர் மக்களுக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டும். மற்ற தனியார் மருத்துவமனைகளும், இதனை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in