ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் 1,396 பேருக்கு தொற்று உறுதி : தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  -  ஒரே நாளில் 1,396 பேருக்கு தொற்று உறுதி :  தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் இதுவரை 848 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 500-ஐ கடந்து கரோனா தொற்று பதிவாகி வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் 60 வார்டுகளில் தடுப்புப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இருந்தாலும். கரோனா தொற்று பரவல் குறைவாக தெரியவில்லை.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 583 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 264-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 423 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதற்கிடையே, வேலூர் மாவட்டத்தில் கரோலை பரவலை படிப்படியாக குறைக்க இன்று முதல் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை கடுமையாக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்

இதுவரை 243 பேர் அம்மாவட் டத்தில் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 2.69 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3,100 பேர் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி முதல் தவணை 55 ஆயிரம் பேருக்கும், 2-வது தவணை 16 ஆயிரத்து 318 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடுவதை இனி வரும் நாட்களில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி முதல் தவணை 55 ஆயிரம் பேருக்கும், 2-வது தவணை 16 ஆயிரத்து 318 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடுவதை இனி வரும் நாட்களில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in