

சூளகிரி ஊராட்சி ஒன்றியங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 42 ஊராட்சிகளிலும் கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வட்டாட்சியர் பூவிதன், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சிவக்குமார், சுப்பிரமணி, மருத்துவர் வெண்ணிலா ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.