ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1.46 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி : சுகாதாரத்துறை தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை  1.46 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :  சுகாதாரத்துறை தகவல்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1.46 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 44 ஆயிரத்து 655 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறியதாவது:

மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

கரோனா தாக்கம் அதிகரிப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று வரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். இவ்்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in