

திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள 65 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கண்காணிப்பு அலு வலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தெரி வித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப் பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள் ஆகிய இடங்களை மாவட்ட கண் காணிப்பு அலுவலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இதில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்ணச்சநல்லூர் வட்டம் கூத்தூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பகுதி, புறத்தாக்குடி கிராமத்தில் தடை செய்யப்பட்ட பகுதி ஆகியவற்றை ரீட்டா ஹரீஸ் தாக்கர் பார்வையிட்டார். தொடர்ந்து, எஸ்.ஆர்.எம். மருத் துவக் கல்லூரியில் உள்ள அரசு மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதையும், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உள்ள தனிமைப் படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு களையும் பார்வையிட்டு, அவை தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், துறையூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வுசெய்தபோது, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், முகக்கவசம் அணிய வும் அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, முசிறி அரசு மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்படுத்தப் பட்டுள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டார்.
பின்னர், ரீட்டா ஹரீஸ் தாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் 42 இடங்களிலும், கிராமப் பகுதிகளில் 23 இடங்களிலும் கரோனா வைரஸ் பரவல் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் தினந்தோறும் 6 ஆயிரம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. திருச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 335 படுக்கைகளும், மணப்பாறை அரசு மருத்துவமனையில் 70 படுக்கைகளும், ரங்கம் அரசு மருத்துவ மனையில் 40 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்கு நர்(குடும்ப நலம்) லட்சுமி, துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.