

நாகப்பட்டினம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, நாளை(மே 10) முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறுபான்மை பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவரும், நாகூர் தர்கா ஆதீனஸ்தர்கள் சங்கத் தலைவருமான தமீம் அன்சாரி சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தங்களின் 5 கடமைகளில் 3-வது கடமையான நோன்பை கடைபிடித்து வரும் முஸ்லிம்கள், மே 14-ம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும். மேலும், ரம்ஜான் நாளில் முஸ்லிம்கள் தங்களின் தலையாய கடமையை நிறைவேற்ற, கடைவீதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையிலும் தளர்வு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.