

தமிழக அரசு வழங்கியுள்ள சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள அகன்ற திரையுடன் கூடிய தொலைக்காட்சி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி மூலம் கரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள் செய்ய வேண்டியவைகள் குறித்த விழிப்புணர்வு செய்திகள் ஒளிபரப்பப்படும்.
தொலைக்காட்சி சேவையை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உடனிருந்தார்.