

தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையின் சார்பில் தூத்துக்குடி திரு இருதய மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு மற்றும் செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமார் தலைமை வகித்தார்.
முகாமில் மருத்துவமனகளில் உள்ள தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பராமரித்தல் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், மருத்துவமனைகளில் தீ பாதுகாப்புகுழு அமைத்து, காலமுறையாக தீ தடுப்பு சாதனங்களை கையாளுதல்குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
முகாமில், திரு இருதய மருத்துவமனை மருத்துவர் லிசி ஜான், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை உதவி மாவட்ட அலுவலர் த.முத்துப்பாண்டியன், தூத்துக்குடி நிலைய அலுவலர் ஜோ.சகாயராஜ் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.