

சிக்கிம் – சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
தி.மலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் வசித்தவர் பிரகாஷ் (31). எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். சிக்கிம் - சீன எல்லையில் கடந்த 6-ம் தேதி பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல், அவரது குடும்பத்துக்கு நேற்றுமுன்தினம் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ள னர். பிரகாஷ் உயிரிழந்த தகவல் வெளியானதும், ஒண்ணுபுரம் கிராமம் சோகத்தில் மூழ்கிஉள்ளது. அவரது உடல், 10-ம் தேதி (நாளை) கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.