

வடலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பேருராட்சி அலுவலர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் தலைமை தாங்கினார். வடலூர் பேரூராட்சி பகுதியில் வேகமாக பரவி வரும் கரோனா பரவலைத் தடுக்க பேரூராட்சி பகுதியில் தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர 90 சதவீதம் திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். அதன் முதற்கட்டமாக பேரூராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதில்லை என முடிவு செய்யப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 50 பேருக்கு மிகாமல் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.