விழுப்புரத்தில் அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்கள் - வீடு, வீடாக நேரில் சென்று கரோனா பரிசோதனை :

விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் அங்கன்வாடி, மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கரோனா  பரிசோதனை செய்தனர்.
விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் அங்கன்வாடி, மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் நகரில் வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புஎண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 21 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் நகரப் பகுதியில் மட்டும் கரோனாதொற்று தினமும் 500-ஐ தாண்டியுள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில், அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் கரோனா தொற்றாளர்களை கண்டறிந்து, உரிய சிகிச்சைஅளிக்கவும், முற்றிலும் தடுத்திடும் வகையில் வீடு, வீடாகச்சென்று பரிசோதனை மேற்கொள்ள ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார். இதற்காக நகரப்பகுதியில் 100 அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், நேற்று முதல் வீடு,வீடாகச் சென்று கரோனா பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். தந்தை பெரியார்நகரில் வீடு, வீடாகச் சென்ற பணியாளர்கள், வீட்டில் மொத்தம் எத்தனை நபர்கள் உள்ளனர். இதில், காய்ச்சல், சளி, இருமல்அறிகுறிகளுடன் யாரும் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்தனர். இந்த அறிகுறிகள் இருந்தால்கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் நகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in