

கரூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரி ழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் நெடுங்கூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர் நூல் ஏற்றுவதற்காக மினி வேனில் கரூர் நோக்கி நேற்று சென்றுள்ளார். பவித்திரம் அருகே வானவிழி பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கல்குவாரி லாரி, மினிவேன் மீதும், அதைத் தொடர்ந்து வந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் மீதும் மோதியது.
இதில், படுகாயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட மினி வேன் ஓட்டுநர் செந்தில்குமார், இருசக்கர வாக னத்தில் சென்ற பவித்திரமேடு ராம நாதன்(55) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த லாரி ஓட்டுநர் உட்பட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.