ரங்கம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் : நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

ரங்கம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் :  நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
Updated on
1 min read

ரங்கம் அரசு மருத்துவமனை யில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலனை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறைக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் நிதித் துறை சிறப்புச் செயலாளருமான ரீட்டா ஹரீஸ் தாக்கர் அறிவுறுத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசி ன் நிதித் துறை சிறப்புச் செயலாள ருமான ரீட்டா ஹரீஸ் தாக்கர் நேற்று ஆய்வு செய்தார். அப் போது, கரோனா தொற்று தாக் கம் காரணமாக திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதி கள், உறையூர் சாலை ரோட்டில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாம் ஆகிய வற்றை சிறப்புச் செயலாளர் ரீட்டா ஹரிஸ் தாக்கர் பார்வையிட்டார்.

பின்னர், ரங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ரீட்டா ஹரிஸ் தாக்கர், அங்கு சுகாதாரத் துறையினரிடம் கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, “ரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்னும் ஒரு வாரத்துக்குள் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் நிறுவ வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்ய தர்ஷினி கூறும்போது, ‘‘திருச்சி மாவட்டத்தில் நாள் தோறும் 6,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 450 படுக் கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ள நிலையில், கூடுதலாக 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியது: ரங்கம் அரசு மருத்துவ மனையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 70 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மணப்பாறை அரசு மருத்துமனையிலும் 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களுக்கு தேவையான அளவு உள்ளது. அதற்குள் மேலும் தடுப்பூசிகள் வந்துவிடும்’’ என்றனர்.

இந்த ஆய்வின்போது மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார்(சட்டம்- ஒழுங்கு), மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிர மணியன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்கு நர் ராம் கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், மணப்பாறை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங் களிலும் கண்காணிப்பு அலுவலர் ரீட்டா ஹரிஸ் தாக்கர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in