

திருநெல்வேலியிலுள்ள மாவட்டநீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை எம்கேபி நகர் கென்னடி தெருவைச் சேர்ந்தபாலமுருகன் மகன் மகாராஜன் (22). கடந்த 2 நாட்களுக்குமுன் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மைதானத்தில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக எம்கேபிநகரை சேர்ந்த சாம் (26), மகேஷ் (27), ஜான்சன் (27), நவீன் (20) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.