முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு: திமுகவினர் கொண்டாட்டம் :

நாகர்கோவில் வடசேரியில்  இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திமுகவினர்.
நாகர்கோவில் வடசேரியில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திமுகவினர்.
Updated on
1 min read

தமிழக முதல்வராக திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றதை, பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஆலங்குளம் அருகே உள்ளகல்லூத்தில் தென்காசி தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முருகன், கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் எழில்வாணன் மற்றும் நிர்வாகிகள் கொண்டாடினர்.

கடையநல்லூரில் நகர இளைஞரணி அமைப்பாளர் அரபா வகாப், வடகரையில் மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூத் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். கழுகுமலை பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். திருச்செந்தூரில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராஜ்மோகன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in