Regional01
ரெம்டெசிவிர் மருந்து மாயம் :
கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த ரெம்டெசிவிர் மருந்து 29 பாட்டில்கள் காணாமல் போனது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
இதனிடையே, சேலம் தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிய புகார் தொடர்பாக அழகாபுரம் போலீஸார் விசாரிக்கினர்.
