

திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் வாசு(16). இவர் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தவர் நேற்று மதியம் நண்பர்களுடன் கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்தேக்கத்தில் குளிக்க சென்றார். அங்குள்ள பிரதான பாசன வாய்க்காலில் குளிக்கும் போது சுழலில் சிக்கிய வாசு தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து திட்டக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.