

திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம் எதிரேயுள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அவ்வாறு நேற்று காலையில் நடைபயிற்சி சென்றபோது, அங்கு இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில், மாநகரகாவல்துணை ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் பாளையங்கோட்டை எம்கேபி நகர் கென்னடி தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் 22) என்பது தெரியவந்தது. பாளையங்கோட்டை போலீஸார் விசாரிக்கிறார்கள்.