வேலூர் மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூமில் - சர்வீஸ் சென்டர்களை மட்டுமே இயக்கலாம் : ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூமில் -  சர்வீஸ் சென்டர்களை மட்டுமே இயக்கலாம் :  ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இரு சக்கர வாகனங்கள், கார் விற்பனை ஷோரூம்களின் வாடிக்கையாளர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரு சக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், மற்றும் கார் விற்பனையகங்களின் சர்வீஸ் சென்டர்கள் மட்டும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.

வாகன விற்பனை ஷோ ரூம்களில் பொது மக்களை அனுமதிக்க கூடாது. அதே போல, ஆட்டோ மொபைல் சார்ந்தசிறு தொழில்கள் பொதுமக்களை அனுமதிக்காமல், பணியாளர் களுடன் இயங்கலாம். பணியில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி பணியாற்ற வேண்டும். வேண்டும்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடை கள் அரசு உத்தரவுபடி வரும் 20-ம் தேதி வரை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். விதிமுறை களை மீறினால் நடவடிக்கை எடுக் கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடை கள் அரசு உத்தரவுபடி வரும் 20-ம் தேதி வரை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in