முஷ்ணம் அருகே : இறுதி ஊர்வலத்தில் மோதல்: 7 பேர் காயம் :

முஷ்ணம் அருகே : இறுதி ஊர்வலத்தில்  மோதல்: 7 பேர் காயம் :
Updated on
1 min read

முஷ்ணம் அருகே இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருபெண் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

முஷ்ணம் அருகே உள்ள சி.ஆதிவராகநல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமி. அதே பகுதியை சேர்ந்தவர் அரிவரதன். இருவரும் உறவினர்கள். இடப்பிரச்சினை தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் அப்பகுதியில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ராமசாமி மற்றும் அரிவரதன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

உருட்டுக்கட்டை, கம்பியால் தாக்கியதில் இருதரப்பினரும் தாக்கினர். இதில், ஒரு தரப்பில் ராமசாமி, ரஞ்சித்குமார், அஜித்குமார், ராஜ்குமார், திலகவதி ஆகியோர் காயமடைந்தனர். மற்றொருதரப்பில் ராஜ்குமார், அஜித்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ராமசாமி புகாரின்பேரில் முஷ்ணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரை, கண்ணன், அறிவழகன் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in