

ராஜாக்கமங்கலத்தை அடுத்தபருத்திவிளை அருகே புல்லுவிளையில் சிவன் கோயில் உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் கோயிலின் பின்புறம் கிடப்பதை பார்த்த பக்தர்கள் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் அங்கு சென்று உண்டியலை கைப்பற்றினர். உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது, ஒரு நபர் உண்டியலை உடைத்து வெளியே கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நாகர்கோவில், கோட்டாறு மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தது தெரியவந்தது. சுரேஷை போலீஸார் நேற்று கைது செய்தனர்.