கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.92 லட்சம் அபராதம் :

கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.92 லட்சம் அபராதம்  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, சமூகஇடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 மற்றும் கூட்டம்அதிகமாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மட்டும் முகக்கவசம் அணியாத 1,037 பேரிடம்ரூ.2,07,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 43,429 பேரிடம் ரூ.86,85,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் மட்டும்சமூக இடைவெளியை பின்பற்றாத 17 பேரிடம் ரூ.8,500 அபராதம்வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,037 பேரிடம் ரூ. 5,18,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிககூட்டம் இருந்ததாக இதுவரை 6 இடங்களில் ரூ.3,000 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.92,07,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in