கடந்த 4 ஆண்டுகளில் இழந்த - தமிழகத்தின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்பார் : முன்னாள் எம்எல்ஏ எஸ்.கருணாஸ் நம்பிக்கை

கடந்த 4 ஆண்டுகளில் இழந்த  -  தமிழகத்தின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்பார்  :  முன்னாள் எம்எல்ஏ எஸ்.கருணாஸ் நம்பிக்கை
Updated on
1 min read

கடந்த 4 ஆண்டுகளில் இழந்த தமிழகத்தின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் நிச்சயம் மீட்டெ டுப்பார் என முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கருணாஸ் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது அனுபவ அறிவு, நிர்வாகத் திறன் ஆகியவற்றின் மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இழந்த தமிழகத்தின் உரிமைகளை நிச்சயம் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு கட்சி என்பது அனைத்து மக்களையும் சரிசமமாக பார்க்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட வாக்குகளுக்காக மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு செய்த தவறுக் கான பலனைத்தான் அதிமுக இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது.

ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் மக்களுக்கான தேவைகள், உரிமைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. 108 சமுதாயங்கள் அடங்கிய சீர்மரபினர் கணக்கெ டுப்பை நடத்தி அதன்மூலம் இடஒதுக்கீட்டை அறிவிக்குமாறு 2020-ல் மத்திய அரசு உத்தரவிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. அதேபோல, கள்ளர், மறவர், அகமுடையார் ஆகி யோரை இணைத்து தேவர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அரசாணையும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், முக்குலத்தோர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் அரசியல் மாற்றத்துக்காக இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

தற்போது முதல்வராக பொறுப் பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினிடம் எங்களது 12 அம்சக் கோரிக்கை களை முன்வைப்பேன். அவர் எங்கள் கோரிக்கைகளை நிச்ச யம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in