

செங்கோட்டை நூலகத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐஎப்எஸ் தேர்வில் வெற்றிபெற்று தற்போது பயிற்சியில் இருக்கும் செங்கோட்டையைச் சேர்ந்த ராஜா பயிற்சி அளித்தார். வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆதிமூலம், இணைச் செயலாளர் செண்பக குற்றாலம், பொருளாளர் பா.சுதாகர், விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் சேகர் உள்ளிட்டோர் பேசினர். நூலகர் ராமசாமி நன்றி கூறினார். பயிற்சியில் 40 பேர் கலந்துகொண்டனர்.