வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் 516 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு :

வேலூர் மாவட்டத்தில் -  ஒரே நாளில் 516 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சராசரியாக 400 என்ற அளவில் இருந்த தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக் கையாக நேற்று 516 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டின் ஒரு நாளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நேற்று முன்தினம் மட்டும் கரோனா தொற்றால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று ஆலோ சனை நடைபெற்றது. இதில், நாளை (6-ம் தேதி) முதல் அறி விக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in