

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1,566 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, “மாவட்டத்தில் மொத்தம் 3.75 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 2,740 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பில் இல்லை. மாவட்டத்தில் மொத்தம் 7,930 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,126 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து நேற்று ரூ.1.99 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்றனர்.