எம்பி-யா, எம்எல்ஏ-வா என்பதை தலைமையுடன் ஆலோசித்து முடிவு : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தகவல்

எம்பி-யா, எம்எல்ஏ-வா என்பதை தலைமையுடன் ஆலோசித்து முடிவு :  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  தகவல்
Updated on
1 min read

சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்பதா அல்லது மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதா என்பது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாக கே.பி.முனுசாமி எம்பி தெரிவித்தார்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணத்தை சேர்ந்தவர் இவர். கடந்த ஆண்டு (2020) மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது.

தற்போது நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வேப்பனப்பள்ளி தொகுதி யில் பேட்டியிட்ட கே.பி.முனுசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முருகனைவிட 3054 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை கே.பி.முனுசாமி ஏற்பதாக இருந்தால், எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வரும். எம்பியாக தொடர நினைத்தால், எம்எல்ஏவாக பதவி ஏற்க முடியாத நிலை ஏற்படும். இதனை தொடர்ந்து வேப்பனப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

இதுதொடர்பாக கே.பி.முனுசாமி எம்பியிடம் கேட்ட போது, எம்பியாக தொடர்வதா அல்லது எம்எல்ஏவாக பதவி ஏற்பதா என்பது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in