காவேரிப்பட்டணம் அருகே - இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு :

காவேரிப்பட்டணம் அருகே -  இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கீழ் கொள்ளுப்பட்டியைச் சேர்ந்த சேட்டுஎன்பவருடைய மகன் கஸ்தூரிராஜன் (16). மேல் கொள்ளுப் பட்டியைச் சேர்ந்தவர் சசி (எ) சிதம்பரநாதன் (24), நடு கொள்ளுப்பட்டியைச் சேர்ந்தவர் வெற்றி (15).நண்பர்களான இவர்கள் 3பேரும் ஒரே இருசக்கர வாகனத் தில், நேற்று முன்தினம் கிருஷ்ண கிரி மாவட்டம் பண்ணந்தூர் கிராமத்திற்கு வந்துவிட்டு மீண்டும் காரிமங்கலம் நோக்கி இரவில் சென்று கொண்டிருந்தனர். இதே போல், காவேரிப்பட்டணம் அருகேஉள்ள வாடமங்கலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (19). பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பாட்டி சந்திரா (60) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தட்ர அள்ளியில் இருந்து பண்ணந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். தேவீரஅள்ளி முருகன் கோயில் அருகே வரும்போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கஸ்தூரிராஜன், அரவிந்த் மற்றும் சந்திரா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த சசி, வெற்றி ஆகியோரை அங்கிருந் தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பாரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in