கரோனாவில் இருந்து மக்களைக் காக்க -  ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் :  தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

கரோனாவில் இருந்து மக்களைக் காக்க - ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் : தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

Published on

கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வர் பொறுப்பை ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கவிருக்கும் பழனிசாமி, வெற்றி பெற்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் காலகட்டத்தில் உருவான கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்ற முற்படுதல் அனைத்துக் கட்சியினரின் நீங்காத ஜனநாயக கடமையாகும். குறிப்பாக, கொடிய கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்க வேண்டிய மாபெரும் பணி நம் முன் நிற்பதை உணர்ந்து ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் இணைந்து கரம் கோர்த்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in