ரசாயன உரச்செலவை குறைக்க - மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் :

ரசாயன உரச்செலவை குறைக்க  -  மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் :
Updated on
1 min read

ரசாயன உரச்செலவை குறைக்க, மண் புழு உரம் தயாரிப்பில் சோழவந் தான் பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மண்ணாடிமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெ.ஆனந்தன் (48). இவர் 3 ஏக்கரில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகிறார்.

இவர் மாதம்தோறும் ரூ.10 ஆயி ரத்துக்கு ரசாயன உரம் வாங்க செலவழித்தார். அதில் ரசாயன உரச்செலவைக் குறைக்க மண்புழு உரக் கூடம் அமைத்து இயற்கை உரம் தயாரிக்க தோட்டக்கலை துறையினர் ஆலோசனை வழங்கினர். அதன்படி மண்புழு உரக்கூடங்கள் மூலம் இயற்கை உரம் தயாரித்து வருகிறார். இதன் மூலம் உரச்செலவு குறைந்ததுடன் விளைச்சலும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயி ஆனந்தன் கூறியதாவது:

தென்னையில் ஊடுபயிராக வாழை நடவு செய்துள்ளேன். இதற்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரம் வாங்கச் செலவிட்டேன்.

பின்னர் வாடிப்பட்டி தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் ரூ.50 ஆயிரம் மானியத் தில் 16 அடி நீளம், 3 அடி உயரம், 4 அடி அகலத்தில் மண்புழு உரக்கூடத்தை அமைத்தேன். அதில் மாட்டுச்சாணம் இட்டு மண்புழுக்களை விட வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து ஈரப்பதத் துடன் வைத்திருந்தால், மண்புழுக்கள் மூலம் செறிவூட்டப்பட்ட உரம் கிடைக் கும். 4 தொட்டிகளில் உள்ள மண்புழு உரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் எடுத்து தென்னை, வாழைக்கு உரமிட்டு வருவதால் ரசாயன உரச்செலவு குறைந்தது.

பயிர்கள் செழிப்பாக வளர்கிறது. தென்னையில் குரும்பை உதிர்வது குறைந்து, காய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாழையும் நோய் தாக்குதலின்றி செழிப்போடு வளர்கிறது என்றார்.

4 தொட்டிகளில் உள்ள மண்புழு உரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் எடுத்து தென்னை, வாழைக்கு உரமிட்டு வருவதால் ரசாயன உரச்செலவு குறைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in