

உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் 600 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். பாறைப் பட்டி, வலையபட்டி, கோடாங்கி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை பயிர் விளைந்து, தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது. அப்பகுதியில் நிலக்கடலை அறுவடை செய்வதற்கு ஏற்றவாறு சில தினங்களாக சாரல் மழை பெய்துள் ளது. அதனால் மேல்மண் லேசான ஈரத்துடன் இருப்பதால் நிலக்கடலை செடிகளை பிடுங்குவதற்கேற்ற பக்குவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சந்தையில் நிலக்கடலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனையாவதால் விவசாயிகள் நேரடியாக விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.