

காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கோடை மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. கோடை மழை குறைந்து வெயில் அடித்து வரும் நிலையில் மீண்டும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,567 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,127 கனஅடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 800 கனஅடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன் தினமும், நேற்றும் அணை நீர்மட்டம் 98 அடியாக நீடித்தது. நீர் இருப்பு 62.27 டிஎம்சி-யாக இருந்தது.