

பொது அமைதிக்கு எதிராக செயல்படும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.
ஈரோடு மணக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
ஈரோடு மணக்காடு தோட்டம் பகுதியில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் தொந்தரவு அதிகரித்து வந்ததால், ஈரோடு பழைய கரூர் ரோடு மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் காவல்துறையில் புகார் அளித்து, அவர்களை சிறையில் அடைத்தோம்.
தற்போது அந்த நபர்கள், சங்க நிர்வாகிகளையும், பொது மக்களையும் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள். அவர்கள் திருடியபொருட்களை எங்களிடம் கொடுத்ததாக பொய் குற்றச் சாட்டுகளைக் கூறி வரு கின்றனர். இதனால் எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படு கின்றன. இப்பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.