மாதிரி வாக்குப்பதிவுகளை அழிக்காததால் - 3 இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணவில்லை :

மாதிரி வாக்குப்பதிவுகளை அழிக்காததால் -  3 இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணவில்லை :
Updated on
1 min read

தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும்வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரிவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.இயந்திரம்சரியாக உள்ளதை உறுதி செய்தபின், மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை முழுமையாக அழித்துவிட வேண்டும். அதன் பிறகு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும்.

ஆனால், கோவில்பட்டி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருச்செந்தூர் தொகுதியில் ஒருவாக்குச்சாவடியிலும் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளை அழிக்காமல் தொடர்ச்சியாக வாக்குப்பதிவை நடத்தியுள்ளனர். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் இந்த மூன்று வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தனியாக எடுத்துவைக்கப்பட்டன.

வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்து, தேவைப்படும்பட்சத்தில் மட்டுமே இந்த இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும், விவிபாட் கருவியில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ண தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் 1000-க்கும் குறைவான வாக்குகள் தான் உள்ளன. மேலும்,இந்த இரு தொகுதிகளிலும் முதல் 2 இடங்களை பிடித்தவேட்பாளர்களின் வாக்குகளுக்கு இடையிலான வித்தியாசம் அதிகமாக இருந்ததால், இந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் அவசியம்ஏற்படவில்லை. எனவே, மூன்று இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in